/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் இளைப்பாறும் கால்நடைகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்.. ' பயணம்

ADDED : அக் 21, 2024 02:21 AM

திருவள்ளூர்:சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, செம்பரம்பாக்கம், செட்டிபேடு, பாப்பரம்பாக்கம், தண்டலம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் இளைப்பாறுகின்றன.
இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் பலியாகி வரும் நிலையும் ஏற்படுகிறது.
குறிப்பாக கால்நடைகள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் இளைப்பாறுவது வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.