/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா புதுமாவிலங்கையில் விபத்து அபாயம்
/
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா புதுமாவிலங்கையில் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா புதுமாவிலங்கையில் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் கால்நடைகள் உலா புதுமாவிலங்கையில் விபத்து அபாயம்
ADDED : செப் 08, 2025 11:34 PM

கடம்பத்துார், புதுமாவிலங்கை பகுதியில் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுமாவிலங்கை ஊராட்சி. இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையில் பல இடங்களில் இளைப்பாறுகின்றன.
இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருவதோடு, விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சில நேரங்களில் விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த, ஒன்றிய நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எவ்வித நடடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.