/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாட்டு தொழுவமான கழிப்பறை வளாகம் கீழ்சிட்ரபாக்கத்தினர் அவதி
/
மாட்டு தொழுவமான கழிப்பறை வளாகம் கீழ்சிட்ரபாக்கத்தினர் அவதி
மாட்டு தொழுவமான கழிப்பறை வளாகம் கீழ்சிட்ரபாக்கத்தினர் அவதி
மாட்டு தொழுவமான கழிப்பறை வளாகம் கீழ்சிட்ரபாக்கத்தினர் அவதி
ADDED : டிச 23, 2024 11:56 PM

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேரூராட்சி, கீழ்சிட்ரபாக்கம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக, விவசாயம், கால்நடை வளர்த்தல் மற்றும் கூலி வேலைக்கு செல்வது உள்ளது.
இங்கு வாழ்பவர்கள் சிலர் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து வந்தனர். இதையடுத்து, திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல் திட்டம் வாயிலாக, 2014 - 15ம் ஆண்டு, 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
துவக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில், பின், மாடுகள் கட்டும் தொழுவமாக மாறியது. வைக்கோல் போட்டு வைத்தல், மூட்டை அடுக்கி வைக்கும் இடமாகவும், மாடுகளை கட்டும் தொழுவமாக மாறியது.
கழிப்பறை வளாகம் உள்ளே அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கீழ்சிட்ரபாக்கம் பகுதியில் உள்ள கழிப்பறை வளாகத்தை சீர்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.