/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்கு காவல் நிலையங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
/
நான்கு காவல் நிலையங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
நான்கு காவல் நிலையங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
நான்கு காவல் நிலையங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம்
ADDED : செப் 07, 2025 10:14 PM
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட நான்கு காவல் நிலையங்களில், நவீன 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு உட்கோட்டங்களில், 22 சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்கள், தலா, நான்கு மகளிர் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையங்கள் என, மொத்தம் 30 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெரும்பாலான காவல் நிலையங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால், 'சிசிடிவி' கேமரா பழுதடைந்து காட்சி பொருளாக மாறியது.
தற்போது, திருவள்ளூர் தாலுகா, திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு காவல் நிலைங்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும், ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், 'புதிதாக பொருத்தப்பட்டு வரும் 'சிசிடிவி' கேமராக்கள் மூலம், காவல் நிலையம் வருவோர் மற்றும் போலீசார் பேசுவதை பதிவு செய்ய முடியும்' என்றார்.