/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவுடையம்மன் கோவிலில் மூத்த தம்பதியருக்கு விழா
/
திருவுடையம்மன் கோவிலில் மூத்த தம்பதியருக்கு விழா
ADDED : நவ 10, 2025 10:58 PM

மீஞ்சூர்: மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் திட்டத்தின் கீழ், திருவுடையம்மன் கோவிலில் நேற்று மூன்று தம்பதியருக்கு சிறப்பு செய்யும் விழா நடந்தது.
'ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், 70 வயது நிறைவடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியரை வாழ்த்தி, சிறப்பு செய்யப்படும்' என, தமிழக அரசு அறிவித்திருந்தது.
இத்திட்டத்தின் கீழ், மீஞ்சூர் அடுத்த மேலுாரில் உள்ள திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவிலில் நேற்று 70 வயது முடிந்து, மணிவிழா கண்ட மூன்று தம்பதியருக்கு சிறப்பு செய்யும் விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தம்பதியருக்கும், புடவை, வேட்டி, சட்டை, வளையல், தாம்பூலம் என, 2,500 ரூபாய் மதிப்புள்ள, 11 வகை பொருட்கள் கொண்ட சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டன. கோவிலில், சிறப்பு தீபஆராதனைகள் நடந்தன.

