/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இந்தியன் ஆயில் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் குடும்பத்தினர் பங்கேற்பு குடும்பத்தினர், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ADDED : நவ 10, 2025 10:58 PM
மீஞ்சூர்: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனைய ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம், நான்காவது நாளாக நீடித்து வரும் நிலையில், நேற்று குடும்பத்தினர், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயு முனையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்களிடம் பல்வேறு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. நான்காவது நாளாக நேற்று போராட்டம் நீடித்தது. நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர், வி.சி., கட்சியினர் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதற்கிடையே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் இருவர் மயங்கியதை தொடர்ந்து, அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறை வேற்றும் வரை, போராட்டம் தொடரும் என, தொழிற்சங்கத்தினர் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.
ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழிலாளர் நல ஆணையர் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.