/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு
/
பொன்னேரியில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு
ADDED : ஏப் 19, 2025 10:02 PM
பொன்னேரி:பொன்னேரியில், நேற்று கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில், பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில், பொன்னேரி அடுத்த பொதியாரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குணசுந்திரி, 60, பொன்னேரி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த கோவிந்தம்மாள், 75, ஆகியோர் தேரின் வடம் பிடித்து இழுத்து கொண்டிருந்தனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு, குணசுந்திரி மற்றும் கோவிந்தம்மாள் கழுத்தில் இருந்த, தலா, 3 சவரன் செயின்களை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து குணசுந்தரி, கோவிந்தம்மாள் ஆகியோருக்கு, தங்கள் செயின்கள் பறிபோனது தெரிந்தது.
திருட்டு கும்பலில் ஈடுபட்ட பெண்கள், தேர் இழுக்க வந்தது போல் நடித்து, செயின் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒரே இடத்தில் இரண்டு பெண்களிடம் செயின் பறிப்பு நடந்ததால், பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரிடமும் புகார் பெற்று, திருட்டில் ஈடுபட்ட பெண்களை தேடி வருகின்றனர்.

