/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
/
திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
திருத்தணி பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : ஜூன் 22, 2025 08:57 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 40. இவர், நேற்று காலை மனைவி ஞானசுந்தரி, 35, என்பவருடன், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.
தரிசனம் முடிந்து ஊருக்கு செல்வதற்காக சங்கர், ஞானசுந்தரி ஆகிய இருவரும், திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். ஆர்.கே.பேட்டை செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது, ஞானசுந்தரியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, ஞானசுந்தரி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.