/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்வி உதவித்தொகை பெறும் விண்ணப்ப முறையில் மாற்றம்
/
கல்வி உதவித்தொகை பெறும் விண்ணப்ப முறையில் மாற்றம்
ADDED : மார் 28, 2025 10:39 PM
திருவள்ளூர்:முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிக்கும் முறையில் நடப்பாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறையில், நடப்பு 2025 - 26ம் ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, தொகுப்பு நிதியில் அந்தந்த கல்வியாண்டு துவங்கும் நாளான, ஜூன் 1 - நவ., 15 வரை www.exwel.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வியாண்டு நிறைவடைந்த பின் பெறப்படும் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.
தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, முந்தைய ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ, 044 - 2959 5311 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.