/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீர்த்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
/
தீர்த்தீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ADDED : ஏப் 09, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
lதிருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது.
திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம், கடந்த 1ம் தேதி துவங்கியது.
காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வந்து அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் ஏழாம் நாளான நேற்று, ரத உற்சவம் நடந்தது. இதில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலா வந்தார். இன்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

