/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
/
திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED : ஜூலை 26, 2025 02:15 AM

கூவம்:திரிபுரசுந்தரி அம்மன் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் நேற்று, ஆடி பிரம்மோத்சவத்தை ஒட்டி தேரோட்டம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் திரிபுரசுந்தரி அம்மன் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 19ம் தேதி திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, ஆடிப்பூர பிரம்மோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரில் எழுந்த ருளிய திரிபுரசுந்தரி அம்மன், முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், 12:45 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது. வரும் 29ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுமென, ஹிந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.