/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா கடத்தல் தடுக்க சோதனை சாவடி
/
கஞ்சா கடத்தல் தடுக்க சோதனை சாவடி
ADDED : ஜன 04, 2024 09:54 PM
திருத்தணி:ஆந்திர மாநிலம் நகரி அடுத்த ஓ.ஜி.குப்பம் பகுதியில் இருந்து தமிழக எல்லையான பூனிமாங்காடு வழியாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மர்ம நபர்கள் கடத்தி செல்கின்றனர்.
இரு நாட்களுக்கு முன், நுாறு நாள் வேலையில் இருந்த பெண்களை, கஞ்சா போதையில் வந்த மூன்று இளைஞர்களை கத்திகளை காட்டி கொலை செய்துவிடுவோம் என மிரட்டி தப்பியோடினர். இதையடுத்து நேற்று மூன்று இளைஞர்களை கனகம்மாசத்திரம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை எஸ்.பி., சீபாஸ் கல்யாண் பெண்களை இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டிய இடத்தை பார்வையிட்டார்.
' கஞ்சா கடத்தல் தடுப்பதற்காக, விரைவில் ஓ.ஜி.குப்பம்--- பூனிமாங்காடு இடையே சோதனை சாவடி அமைத்து தடுக்கப்படும். பூனிமாங்காடு பகுதியில் இரவு, பகலாக போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுவர்' என்றார்.