/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பறிமுதல் சென்னை நபர் கைது
/
குட்கா பறிமுதல் சென்னை நபர் கைது
ADDED : மார் 29, 2025 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பட்டரைபெரும்புதுார் டோல்பிளாசா பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை நோக்கி வந்த 'ஹூண்டாய் வெர்ணா' காரை சோதனை செய்தபோது, 170 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சென்னை மண்ணடியைச் சேர்ந்த மஹிபால் சிங், 30, என்பவரை கைது செய்தனர். இதன் மதிப்பு 86,624 ரூபாய்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.