/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீனியர் டென்னிஸ் தொடர் சென்னை வீரர் சாம்பியன்
/
சீனியர் டென்னிஸ் தொடர் சென்னை வீரர் சாம்பியன்
ADDED : அக் 06, 2025 11:25 PM

சென்னை டில்லியில் நடந்த தேசிய சீனியர் டென்னிஸ் போட்டியில், சென்னையின் மனிஷ் சுரேஷ்குமார், ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
டி.சி.எம்., ஸ்ரீராம் நிறுவனம், அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் டில்லி லான் டென்னிஸ் சங்கம் சார்பில், பெனிஸ்டா ஓபன் தேசிய டென்னிஸ் போட்டி, டில்லியில் நடந்து வருகிறது.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில், சென்னையைச் சேர்ந்த மனிஷ் சுரேஷ்குமார், தனது அசத்தலான ஆட்டத்தால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இசாக் இக்பாலை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இறுதிப்போட்டியில், மற்றொரு சென்னை வீரரான கீர்த்திவாசனை எதிர்கொண்ட மனிஷ் சுரேஷ்குமார், 6 - 4, 6 - 2 என்ற நேர் செட்களில், கீர்த்திவாசனை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், மஹாராஷ்டிராவின் வைஷ்ணவி, அகன்ஷா நித்திரேவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் அசத்திய வைஷ்ணவி, 6 - 1, 6 - 2 என்ற நேர் செட்களில் அகன்ஷாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.