/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்வதேச சிலம்ப போட்டி 33 பதக்கம் குவித்தது சென்னை
/
சர்வதேச சிலம்ப போட்டி 33 பதக்கம் குவித்தது சென்னை
ADDED : அக் 06, 2025 11:24 PM

சென்னை, கத்தார் நாட்டில் நடந்த சர்வதேச ஓபன் சிலம்ப போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த குளோபல் சிலம்பம் அகாடமி வீரர்கள், 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களை கைப்பற்றினர்.
ஆதிரன் சிலம்பம் சங்கம் சார்பாக, சர்வதேச அளவில், ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி, கத்தார் நாட்டின் ஆதிரா சிலம்பம் அகாடமியில் நடந்தது.
இதில், இந்தியா, கத்தார், ஓமன், சவூதி அரேபியா, மலேஷியா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட, 11 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். தனித்திறமை, தனிச்சண்டை, குழு போட்டி என, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
இதில், இந்தியா சார்பாக போட்டியிட்ட சென்னை குளோபல் சிலம்பம் அகாடமியைச் சேர்ந்த 15 வீரர் - வீராங்கனையர், போட்டிகளின் முடிவில், 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களை அள்ளினர். மேலும், இதில் போட்டியிட்ட இந்திய அணி, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.