/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய மகளிர் கால்பந்து தமிழக அணி தோல்வி
/
தேசிய மகளிர் கால்பந்து தமிழக அணி தோல்வி
ADDED : அக் 06, 2025 11:24 PM
சென்னை, தேசிய மகளிர் கால்பந்து போட்டியில், தமிழக அணி மேற்கு வங்காள அணியிடம் வீழ்ந்தது.
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், தேசிய அளவில், 30வது மகளிர் சீனியர் 'ராஜமாதா ஜிஜாபாய்' கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூரில் நடந்து வருகிறது. இதில், நாட்டின் 10 அணிகள், இரண்டாவது லீக் போட்டியில் மோதுகின்றன.
நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது சுற்றில், தமிழக அணி மேற்கு வங்காள அணியை எதிர்கொண்டது. முதலில் நல்ல தொடக்கம் தந்த தமிழக அணிக்கு, போகப்போக போட்டி கடினமாக மாறியது.
எதிர் அணியின் தடுப்பு பலமாக இருந்ததால், தமிழக அணிக்கு கோலுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்கு வங்காள அணி 25, 42, 83வது நிமிடங்களில், மூன்று கோல்கள் அடித்து போட்டியை தன்வசப்படுத்தியது.
இதனால், போட்டியின் முடிவில், தமிழக அணி 0 - 3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. கடந்த போட்டியில், சத்தீஸ்கர் அணியை 2 - 0 என வெற்றிபெற்ற நிலையில், மேற்கு வங்காளத்திற்கு எதிரான போட்டி கடினமாக அமைந்தது.
அடுத்த போட்டியில், தமிழக அணி கோவா அணியை இன்று எதிர்கொள்கிறது. இதில் வென்றால் மட்டுமே, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும்.