/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில கால்பந்து போட்டி சென்னை அணி ஏமாற்றம்
/
மாநில கால்பந்து போட்டி சென்னை அணி ஏமாற்றம்
ADDED : நவ 15, 2025 01:13 AM
சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் மாநில கால்பந்து போட்டியின் லீக் சுற்று முடிவில், சென்னை மாவட்ட அணி வெளியேறியது.
டாக்டர் சேவியர் பிரிட்டோ குழுமம், சென்னை மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையே 'சேலஞ்சர் கோப்பை' எனப்படும் மாநில அளவிலான கால்பந்து போட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடக்கிறது. இதில், 12 மாவட்ட அணிகள் நான்கு பிரிவுகளாக போட்டியிடுகின்றன.
'லீக் கம் நாக் அவுட்' முறையில் நடக்கும் போட்டி என்பதால், ஒவ்வொரு அணியும் தலா இரண்டு போட்டிகள் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற வேண்டும்.
சென்னை அணி, தன் முதல் போட்டியில் ஏ.சி., மதுரை அணியிடம் 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இரண்டாவது போட்டியில் பழனி அணியை எதிர்த்து 2 - 0 என வெற்றி கண்டது. ஆனால் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணிதான் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில், லீக் சுற்றுகள் அனைத்தும் நேற்று நிறைவு பெற்றன. இதில் திண்டுக்கல், கோவை, சேலம், மதுரை அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றன; சென்னை அணி, போட்டியில் இருந்து வெளியேறியது.

