/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டாக்கத்திகளுடன் வலம் வந்த மூவர் கைது
/
பட்டாக்கத்திகளுடன் வலம் வந்த மூவர் கைது
ADDED : நவ 15, 2025 01:13 AM
சென்னை: சென்னை மந்தைவெளி மேம்பால ரயில் நிலையம் அருகே, அபிராமபுரம் போலீசாரின் வாகன சோதனையில், பைக்கில் பட்டாக்கத்தி களுடன் வலம் வந்த இருவர், நேற்று முன்தினம் இரவு சிக்கினர்; ஐந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த அஜய், 19, சஞ்சய், 23, என்பது தெரிய வந்தது. மந்தைவெளி பாக்கத்தைச் சேர்ந்த மகேந்திரன், 34, என்பவர், கத்தியை கொடுத்து வைத்திருந்ததாகவும், மீண்டும் அவரிடம் கொடுக்க சென்றபோது சிக்கியதும் தெரிய வந்தது.
மந்தைவெளி, அல்போன்சா மைதானம் அருகே கத்தியை வாங்குவதற்காக காத்திருந்த மகேந்திரன், 34, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மூவரிடமும் விசாரணை நடக்கிறது.

