/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல் போன் வெளிச்சத்தில் இயங்கிய அரசு பேருந்தால் பீதி
/
மொபைல் போன் வெளிச்சத்தில் இயங்கிய அரசு பேருந்தால் பீதி
மொபைல் போன் வெளிச்சத்தில் இயங்கிய அரசு பேருந்தால் பீதி
மொபைல் போன் வெளிச்சத்தில் இயங்கிய அரசு பேருந்தால் பீதி
ADDED : நவ 15, 2025 01:13 AM
பள்ளிப்பட்டு: பேருந்தில் மின் இணைப்பு பாதிக்கப் பட்டதால், பயணியரின் மொபைல்போன் வெளிச்சத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்டதால், பயணியர் பீதியடைந்தனர்.
பொதட்டூர்பேட்டையில் இருந்து சோளிங்கருக்கு, நேற்று முன்தினம் இரவு தடம் எண்: 53 என்ற அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அத்திமாஞ்சேரிபேட்டை அருகே வந்த போது, பேருந்தின் முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் அணைந்து விட்டன.
இரவு நேரத்தில் நடுவழியில் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், பயணியர் சிலர் தங்கள் மொபைல்போன் டார்ச் வெளிச் சத்தில், ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து, ஜன்னல் வழியாக சாலையில் வெளிச்சம் தெரியும்படி மொபைல் போனை பிடித்துக் கொண்டனர்.
இந்த மொபைல்போன் வெளிச்சத்திலேயே, அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து சோளிங்கர் பணிமனை வரையிலும் பேருந்து பயணித்தது.
அப்போது, பேருந்தில் இருந்த பயணியர் அச்சத்துடனேயே பயணம் செய்தனர்.