/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபைல்போன் தவணைக்காக பெண்...கொடூர கொலை! : ஊத்துக்கோட்டை வாலிபர் வெறிச்செயல்
/
மொபைல்போன் தவணைக்காக பெண்...கொடூர கொலை! : ஊத்துக்கோட்டை வாலிபர் வெறிச்செயல்
மொபைல்போன் தவணைக்காக பெண்...கொடூர கொலை! : ஊத்துக்கோட்டை வாலிபர் வெறிச்செயல்
மொபைல்போன் தவணைக்காக பெண்...கொடூர கொலை! : ஊத்துக்கோட்டை வாலிபர் வெறிச்செயல்
ADDED : நவ 15, 2025 09:59 PM

ஊத்துக்கோட்டை: மொபைல் போன் தவணை கட்ட பணம் தேவைப்பட்டதால், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, நகையை திருடிச் சென்ற வாலிபர், மொபைல் போன் சிக்னலால் போலீசாரிடம் சிக்கினார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி கிராமத்தில் வசித்து வந்தவர் சாவித்ரி, 55. இவரது கணவர் சுகுமார்.
இவர்களுக்கு சுரேந்தர், மனோஜ்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி, திருநின்றவூர், கொளத்துார் பகுதிகளில் வசிக்கின்றனர்.
சாவித்ரியின் கணவர் சுகுமார் உயிரிழந்து விட் டார். சாவித்ரி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
தரை மற்றும் முதல் தளம் கொண்ட இவரது வீட்டில், தரைத்தளத்தில் வசித்து வந்தார். மாடியில் தேர்வாய் சிப்காட்டில் பணியாற்றும் இருவர் வாடகைக்கு வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மதியம், மாடியில் உள்ள வீட்டை சாவித்ரி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து, சாவித்ரியை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவர் அணிந்திருந்த கம்மல், செயின் உள்ளிட்ட 2.5 சவரன் நகை, மொபைல் போனை திருடிக் கொண்டு, மர்ம நபர் தப்பியோடினார்.
மாலை 4:00 மணிக்கு ஊத்துக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.
எஸ்.பி., பாராட்டு
மர்ம நபர் திருடிச் சென்ற சாவித்ரியின் மொபைல் போன் சிக்னலை பின்தொடர்ந்த போலீசார், அதே பகுதி யை சேர்ந்த வெங்கடேசன், 26, என்பவரை கைது செய்தனர். மொபைல்போன் தவணை கட்ட பணம் தேவைப்பட்டதால், நகைக்காக சாவித்ரியை கொலை செய்ததாக, வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.
கொலை செய்தவரை, 8 மணி நேரத்தில் கைது செய்த, எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் பகதுார், செல்வராஜ் உள் ளிட்டோரை எஸ்.பி., விவேகானந்த சுக்லா பாராட்டினார்.

