/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறிய பயணியர் நிழற்குடை
/
விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறிய பயணியர் நிழற்குடை
விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறிய பயணியர் நிழற்குடை
விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறிய பயணியர் நிழற்குடை
ADDED : நவ 15, 2025 10:04 PM
பள்ளிப்பட்டு: அரசு தொடக்க பள்ளியின் எதிரே உள்ள நிழற்குடை, விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறியுள்ளதால், பயணியர் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம் கிருஷ்ணராஜபேட்டையில், அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் எதிரே திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை செல்லும் கூட்டுச்சாலையில் நிழற்குடை உள்ளது.
கிருஷ்ணமராஜகுப்பம், கன்னிகாம்பாபுரம், துவாரகாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இந்த நிழற்குடையில் காத்திருந்து, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டுக்கு பேருந்து மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் நீண்டகாலமாக பராமரிக்காமல் உள்ளது. இதனால், இந்த நிழற்குடையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. விஷபூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் தயங்குகின்றனர்.
எனவே, பயனின்றி சீரழிந்து வரும் நிழற்குடையை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

