/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று 2 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி
/
இன்று 2 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி
இன்று 2 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி
இன்று 2 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி
ADDED : ஏப் 18, 2025 02:31 AM

திருவள்ளூர்:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, இரண்டு லட்சம் பயனாளிகளுக்கு, 357 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆண்டார்குப்பம் கிராமத்தில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இதையடுத்து, விழா நடைபெறும் இடத்தை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், கலெக்டர் பிரதாப் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் உடனிருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயகுமார் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
விழாவில், 2,02,531 பயனாளிகளுக்கு 357.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், 390.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7,369 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். அதேபோல், 418 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,760 திட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார்.
பயனாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பொது சுகாதார துறை சார்பில், 10 நடமாடும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆறு 'ஆம்புலன்ஸ்'கள், 10 தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கைக்காக நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகளை அழைத்து வந்து, திரும்பி பாதுகாப்பாக அவர்கள் இல்லத்திற்கு செல்ல, துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகளை அழைத்து வர, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்துவதற்காக, பல்வேறு இடங்கள் ஏற்பாடு செய்பப்பட்டுள்ளன.