/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதல்வர் மாநில விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
முதல்வர் மாநில விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 17, 2025 09:46 PM
திருவள்ளூர்:விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்கள், முதல்வர் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு, சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை, பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர், விளையாட்டு போட்டி நடத்துநர் உள்ளிட்டோரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்ப படிவத்தை தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் அலுவலகத்திற்கு வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.