/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 10, 2025 11:10 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் அமைக்கப்பட்டு உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் விழிப்புணர்வு கூட்டம் தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது.
கமிஷனர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில், குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள், காவல்துறை, பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் மற்றும் மருத்துவ துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பங்கேற்று, பெண் குழந்தைகள் பள்ளி இடைநிறுத்தலை தவிர்த்தல், குழந்தை திருமணம், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர், திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மாலை நேரங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அருகில் சிறுவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட போதை பொருள் விற்பனை தடுக்க வேண்டும்; சிறுவர்களுக்கும் இதே போல, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில், சுகாதார அலுவலர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.