/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகராட்சியின் முதல் பூங்கா கவலைக்கிடம் விளையாட தயக்கம் காட்டும் சிறுவர்கள்
/
நகராட்சியின் முதல் பூங்கா கவலைக்கிடம் விளையாட தயக்கம் காட்டும் சிறுவர்கள்
நகராட்சியின் முதல் பூங்கா கவலைக்கிடம் விளையாட தயக்கம் காட்டும் சிறுவர்கள்
நகராட்சியின் முதல் பூங்கா கவலைக்கிடம் விளையாட தயக்கம் காட்டும் சிறுவர்கள்
ADDED : செப் 28, 2024 01:24 AM

திருவள்ளூர்,:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., காலனி பூங்கா பராமரிப்பில்லாததால், சிறுவர்கள் விளையாடும் இடம் புதராக மாறியது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டுக்கு உட்பட்டது என்.ஜி.ஓ., காலனி. இங்கு, 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான பூங்கா ஏற்படுத்தப்பட்டது.
நகராட்சியில் முதல் முதலில் அமைக்கப்பட்ட பூங்கா என்ற பெயரை பெற்ற இங்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மரங்கள், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு நீண்ட நடைபாதை, இருக்கை வசதி, கழிப்பறை, சிறுவர் விளையாடும் இடம் என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம், பூங்காவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒருவரை நியமித்து, நல்ல முறையில் பராமரித்து வந்தது.
இந்த நிலையில், பூங்காவின் மேற்கு பகுதியில், தாழ்வான இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடம், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி குளமாகி மாறிவிடுகிறது. தற்போது, இந்த இடத்தில் செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக, சிறுவர் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும், புதருக்குள் மறைந்து விட்டது. இதனால், சிறுவர்கள் விளையாடுவதற்கு அவர்களின் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரித்து, சிறுவர்கள் விளையாடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.