/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் மே 1ல் சித்திரை மாத பிரம்மோத்சவம்
/
திருத்தணி கோவிலில் மே 1ல் சித்திரை மாத பிரம்மோத்சவம்
திருத்தணி கோவிலில் மே 1ல் சித்திரை மாத பிரம்மோத்சவம்
திருத்தணி கோவிலில் மே 1ல் சித்திரை மாத பிரம்மோத்சவம்
ADDED : ஏப் 28, 2025 01:53 AM
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மற்றும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமர்ச்சையாக நடந்து வருகிறது.
அந்த வகையில் வரும் மே1 ம் தேதி அதிகாலை, 4:00 முதல் 5:00 மணிக்குள் சித்திரை மாத பிரம்மோத்சவம் கொடியேற்றம் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் கேடய வாகனத்தில் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலிக்கிறார்.
மே 2ம் தேதி முதல், 10ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி தேர்வீதியில் உலா வந்து அருள்பாலிப்பார்.
மே 8ம் தேதி இரவு, 8:00 மணிக்கு தெய்வாணை திருக்கல்யாணம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.