/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பால் கடை திறப்பு தாமதம் 'குடி'மகன்கள் பரிதவிப்பு
/
மதுபாட்டில் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பால் கடை திறப்பு தாமதம் 'குடி'மகன்கள் பரிதவிப்பு
மதுபாட்டில் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பால் கடை திறப்பு தாமதம் 'குடி'மகன்கள் பரிதவிப்பு
மதுபாட்டில் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பால் கடை திறப்பு தாமதம் 'குடி'மகன்கள் பரிதவிப்பு
ADDED : செப் 06, 2025 11:40 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள், நேற்று இரண்டரை மணி நேரம் தாமதமாக கடைகளை திறந்தனர். இதனால், 'குடி'மகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் குவிந்திருந்தனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மொத்தம், 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. கடந்த 1ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் இணைந்து, திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை, 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 1ம் தேதி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் அதிகாரிகள், நான்கு நாட்களில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில், 12:00 மணிக்கு மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் திறக்காமல் ஊழியர்கள் இருந்தனர்.
'கடையை திறந்து விற்பனையை தொடர வேண்டும். இரண்டு நாட்களுக்குள் காலி பாட்டில்கள் வாங்க, ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, டாஸ்மாக் அதிகாரிகள் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று மதியம் 2:30 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது.
நேற்று 12:00 மணிக்கு கடைக்கு வந்த 'குடி'மகன்கள், கடை திறக்காததால் கடும் அவதிப்பட்டனர். பின், நீண்ட நேரம் காத்திருந்து, மதியம் 2:30 மணிக்கு மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.