ADDED : செப் 19, 2024 01:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 'துாய்மை சேவை' விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. வரும் 2ம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ச்சியாக பல்வேறு ஊராட்சிகளில் நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் துாய்மை பணி மேற்கொள்வது, அந்த பகுதியில் பசுமையான சூழலாக மாற்ற மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் வங்கனுார் பேருந்து நிலைய பகுதியில், ஆர்.கே.பேட்டை வட்டார துாய்மை பணியாளர்கள், துாய்மை பணி மேற்கொண்டனர்.
நேற்று ஆர்.கே.பேட்டை பெருமாள் கோவில் வளாகத்தில் துாய்மை பணி நடந்தது. ஒன்றிய அதிகாரிகள் மேற்பார்வையில், துாய்மை பணியாளர்கள் மற்றும் பகுதிவாசிகள் துாய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.