/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு தேரடியில் கடிகாரம் சீரமைப்பு
/
திருவாலங்காடு தேரடியில் கடிகாரம் சீரமைப்பு
ADDED : ஜன 30, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு : திருவாலங்காடு தேரடி ஜங்ஷன் பகுதியில் கடந்த, 2020ம் ஆண்டு, 2 லட்சத்து 60,000 ரூபாய் மதிப்பில் ஒலி பெருக்கியுடன் கூடிய மெகா கடிகாரம் புதிதாக அமைக்கப்பட்டது.
இதில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை திருக்குறளும் ஒலிப்பதுடன் விளக்கமும் கூறும்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் இந்த திருக்குறள் குரலோசை கடிகாரம் பழுதடைந்தது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா விசயராகவன் சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கடிகாரம் சீரமைக்கப்பட்டுள்ளது.