/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சி.என்.ஜி., எரிவாயு விலை : கிலோவுக்கு ரூ.2.50 குறைப்பு
/
சி.என்.ஜி., எரிவாயு விலை : கிலோவுக்கு ரூ.2.50 குறைப்பு
சி.என்.ஜி., எரிவாயு விலை : கிலோவுக்கு ரூ.2.50 குறைப்பு
சி.என்.ஜி., எரிவாயு விலை : கிலோவுக்கு ரூ.2.50 குறைப்பு
ADDED : மார் 10, 2024 01:48 AM
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுக வளாகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் உள்ளது.
அங்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில், எல்.என்.ஜி., எரிவாயு எடுத்து வரப்படுகிறது.
இந்த எரிவாயு, வீட்டிற்கு குழாய் வழித்தடத்தில் வழங்கப்படும் பைப்டு நேச்சுரல் காஸ், வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பெயரிலும் விற்கப்படுகிறது.
'டோரன்ட் காஸ்' நிறுவனம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், 67 சி.என்.ஜி., மையங்களில் ஆட்டோ, கார், வர்த்தக வாகனங்களுக்கு, சி.என்.ஜி., எரிவாயு நிரப்புகிறது.
ஒரு கிலோ சி.என்.ஜி., எரிவாயு விலை, 88.50 ரூபாயாக இருந்தது. நேற்று முதல் அதன் விலை கிலோவுக்கு, 2.50 ரூபாய் குறைக்கப்பட்டு, 86 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.