ADDED : நவ 20, 2024 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று 71வது கூட்டுறவு வார நிறை விழா கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 2,833 பயனாளிகளுக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், கூட்டுறவு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், நகராட்சி தலைவர் உதயமலர் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

