/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு நிலம், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் அதிரடி உத்தரவு

ADDED : பிப் 29, 2024 09:46 PM
திருவள்ளூர்:''அரசு நிலம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை, அதிகாரிகள் இணைந்து உடனடியாக அகற்ற வேண்டும்,'' என, கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்று, 13 பேருக்கு, 43.32 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:
மாவட்டத்தில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு, ஏரி, குளங்கள், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணி துறை ஒருங்கிணைந்து தணிக்கை செய்து, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது காவல் துறையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முகவள்ளி, வேளாண் இணை இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.