/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதுகாப்பு இல்லங்கள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
/
பாதுகாப்பு இல்லங்கள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுரை
ADDED : அக் 30, 2024 06:30 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பாதுகாப்பு இல்லங்களை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் குழந்தைகள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், போதை பொருளுக்கு அடிமையானோர் மறுவாழ்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த இல்லங்கள் அனைத்தும் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்டவை ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.