/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரமான உணவு வழங்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
/
தரமான உணவு வழங்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
தரமான உணவு வழங்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
தரமான உணவு வழங்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : பிப் 06, 2025 01:27 AM

திருவள்ளூர்:'திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்' என, மருத்துவமனை நிர்வாகிகளுக்கு கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பதிவேடு பராமரித்தல் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, பச்சிளம் குழந்தை தீவிர சிறப்பு சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் பிரிவு, பிரசவ அறை மகப்பேறு உயர் சிகிச்சை பிரிவினை பார்வையிட்டார்.
அங்குள்ள சமையல் கூடம், உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரத்தினை சோதனையிட்டார். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என, கர்ப்பிணிகளிடம் விசாரித்து, கேட்டறிந்தார்.
பின், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, தரமான உணவு வழங்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள நுாலக மற்றும் அறிவு சார் மையத்தில் நூலகத்தின் செயல்பாடுகள், மாணவர்களின் வருகை, பதிவேடுகள், நுாலகத்தில் உள்ள புத்தகத்தின் இருப்புகள், கழிப்பறை, தண்ணீர் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, துணை முதல்வர் திலகவதி, மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, துணை கண்காணிப்பாளர் விஜயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.