/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சதுரங்கப்பேட்டையில் சுற்றுச்சூழல் பூங்கா கூடுதல் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுரை
/
சதுரங்கப்பேட்டையில் சுற்றுச்சூழல் பூங்கா கூடுதல் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுரை
சதுரங்கப்பேட்டையில் சுற்றுச்சூழல் பூங்கா கூடுதல் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுரை
சதுரங்கப்பேட்டையில் சுற்றுச்சூழல் பூங்கா கூடுதல் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுரை
ADDED : செப் 26, 2024 01:21 AM

திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த, பூண்டி நீர்த்தேக்க கரையை ஒட்டியுள்ள சதுரங்கப்பேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் பூங்காவில், கூடுதல் வசதி ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு விடுமுறை நாட்களிலும், நீர் நிரம்பிய காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணியரை கவரும் வண்ணம், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், பூண்டி நீர்த்தேக்க கரையை ஒட்டி அமைந்துள்ள சதுரங்கப்பேட்டை கிராமத்தில், கடந்தாண்டு 3 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.
இங்கு, நீர் விளையாட்டு, படகு சவாரி, சாகச விளையாட்டு மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலா தலமாக அமைக்கப்பட உள்ளது. பூண்டி நீர்த்தேக்க கரையை ஒட்டி, சதுரங்கப்பேட்டை, மோவூர் கிராம பகுதியில் திட்ட பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் படகு குழாம் அமைத்தல் தவிர்த்து, உணவகம், சமையல் அறை, வரவேற்பு மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய புதிய நிர்வாக கட்டடம் அமைக்கப்படுகிறது.
அணுகுசாலை, உட்புற சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பணி, 3.33 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வாயிலாக வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் அலை குளம், செயற்கை நீர்விழ்ச்சி, 'ஜிப் லைனிங்' வழிகாட்டி பாறை ஏறுதல், தங்கும் அறை ஆகிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் எற்படுத்தி தந்தால், அதிக சுற்றுலா பயணியர் வருகை புரிவர் என, கலெக்டர் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.