/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறப்பு முறை திருத்த விண்ணப்பம் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
/
சிறப்பு முறை திருத்த விண்ணப்பம் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
சிறப்பு முறை திருத்த விண்ணப்பம் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
சிறப்பு முறை திருத்த விண்ணப்பம் வீடுகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
ADDED : டிச 15, 2024 12:41 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை, கலெக்டர் வீடுகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2025ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த அக்.29ம் தேதி வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலில், புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
மேலும், நவ.28ம் தேதி வரை, வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் பெறப்பட்டன. இந்த முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் மீது, வரும் 24ம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் முடிவு எடுக்கப்பட்டு, ஜன.6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், பெறப்பட்ட படிவங்களில் புதிய வாக்காளர், ஒரே தொகுதிக்குள் பாகம் மாறுதல், பெயர் நீக்குதல் உள்ளிட்ட படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், நேற்று புல்லரம்பாக்கம், தோமூர் பகுதிகளில் மேலாய்வு செய்தார்.