/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'மக்களுடன் முதல்வர்' அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
/
'மக்களுடன் முதல்வர்' அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
'மக்களுடன் முதல்வர்' அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
'மக்களுடன் முதல்வர்' அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : ஜன 10, 2025 10:38 PM
திருவள்ளூர்:'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட முகாம் குறித்து, அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 'மக்களுடன் முதல்வர்' மூன்றாம் கட்ட முகாம் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் இரண்டு கட்டத்திலும் பெறப்பட்ட மனுக்களுக்கு சரியான முறையில் தீர்வு காணப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 9 வருவாய் வட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் விளிம்பு நிலை பட்டியல் இன மக்கள் அதிகமாக வசித்து வரும் 50 குக்கிராமங்களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடத்த வேண்டும்.
முகாம்களில் 15 துறைகளில், 44 சேவைகளுக்கான கோரிக்கை மனு பெறுவது தொடர்பாக நடைபெறும். எனவே அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு வரும் கோரிக்கை மனுக்கள் மீது சரியான முறையில் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், தனி துணை கலெக்டர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்..