/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
போதை பொருள் விற்பனையை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2025 08:10 PM
திருவள்ளூர்:கடைகளில் போதை பொருள் விற்பனையை தடுக்க, அனைத்து துறை கூட்டாய்வு நடத்த வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு தரம் மற்றும் விதிகளை நடைமுறைபடுத்துவதற்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம், நேற்று கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 'உணவு பொருட்களின் தரங்கள் குறித்து கடைகளில், பிற துறையினருடன் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது, ஏதேனும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக கடையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிக்கோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.
இதில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.