/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் கால்நடைகள் உலா காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு
/
ஊத்துக்கோட்டையில் கால்நடைகள் உலா காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு
ஊத்துக்கோட்டையில் கால்நடைகள் உலா காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு
ஊத்துக்கோட்டையில் கால்நடைகள் உலா காற்றில் பறக்குது கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 30, 2025 12:18 AM

ஊத்துக்கோட்டை,
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
இந்த சாலை வழியாக, தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. காலை - மாலை நேரங்களில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.
இப்பகுதி வளர்க்கப்படும் கால்நடைகளை, அதன் உரிமையாளர்கள் வீடுகளில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இவை உணவிற்காக சாலையில் உள்ள பூ, பழம், காய்கறி கடைகளுக்கு செல்கின்றன.
வியாபாரிகள் அவற்றை துரத்தும் போது, தறிகெட்டு சாலையில் ஓடுகின்றன. அப்போது, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மீது மோதுவதால் விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில், 'சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும்' என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஊத்துக்கோட்டையில் ஆய்வு செய்த கலெக்டர், பேரூராட்சி நிர்வாகத்திடம், 'சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதியுங்கள்' என உத்தரவிட்டார்.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில், சாலையில் மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஒரு மாதமாகியும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்வதில்லை.
எனவே, ஊத்துக்கோட்டையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.