/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாயை துார்வார அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
மழைநீர் கால்வாயை துார்வார அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மழைநீர் கால்வாயை துார்வார அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
மழைநீர் கால்வாயை துார்வார அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 02, 2025 11:06 PM
திருவள்ளூர்:காக்களூர் ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாயை, மழைக்காலத்திற்குள் துார்வாரி சீரமைக்க, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் உள்ள மழைநீர் கால்வாயை, கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார். காக்களூர் ஊராட்சி பகுதியில் இருந்து, ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் துார்ந்து போய், செடிகள் வளர்ந்து இருந்தன.
மழைக்காலம் துவங்குவதற்குள் கால்வாயை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, நீர்வளத் துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, காக்களூர் ஏரியை பார்வையிட்டார். அப்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஜான் தேவகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.