/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இடைநின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்க்க கலெக்டர் உத்தரவு
/
இடைநின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்க்க கலெக்டர் உத்தரவு
இடைநின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்க்க கலெக்டர் உத்தரவு
இடைநின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் சேர்க்க கலெக்டர் உத்தரவு
ADDED : நவ 20, 2024 10:15 PM
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நீண்டநாள் பள்ளிக்கு வராத மாணவர்களின் விபரத்தை சேகரித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது வட்டாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
அவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் தமிழ் செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வாசிப்பு இயக்கம் புத்தகங்களை பெற்ற பள்ளிகள், அவற்றை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களுடைய படிக்கும் நிலையை இ.எம்.ஐ.எஸ்.எல்.,லில் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிகளை பார்வையிடும் கல்வித்துறை அலுவலர்கள் முழு வகுப்பை ஆய்வு செய்து, ஆசிரியர்களின் நிறை, குறைகளை அட்டவணைப்படுத்தி, கலெக்டரின் நேரடி பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர், பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் குறை இருப்பின், உடனுக்குடன் பொறியாளரிடம் தெரிவித்து சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.