/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆற்றில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட கலெக்டர் உத்தரவு
/
கூவம் ஆற்றில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட கலெக்டர் உத்தரவு
கூவம் ஆற்றில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட கலெக்டர் உத்தரவு
கூவம் ஆற்றில் உடைந்த தரைப்பாலத்தை அகற்றி புதிதாக கட்ட கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 14, 2025 02:09 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் - மணவாள நகர் இடையே, கூவம் ஆற்றை கடக்கும் வகையில், 70 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வரை, இந்த தரைப்பாலம் வழியாகத் தான், சென்னையில் இருந்து திருவள்ளூர் வரும் வாகனங்கள் பயணித்தன.
மேலும், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்த கார்கள், ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயில்களில் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில், வரதராஜபுரம் அருகில், சென்னை - அரக்கோணம் ரயில் கடவுப்பாதையில் ரயில்கள் செல்லும் போது, அடிக்கடி சாலை மூடப்படும். இதனால் ஏற்படும் அசவுகரியத்தை தவிர்க்க, அருகிலேயே கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும், புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் வழியாக பயணித்து வருகின்றன.
இதற்கிடையே, கூவம் ஆற்றின் குறுக்கே உடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளதால், மணவாளநகரில் இருந்து வரதராஜநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், ரயில் நிலையம் சென்று, நீண்ட துாரம் சுற்றி வருகின்றனர்.
மேலும், இந்த தரைப்பாலத்தை சீரமைக்காததால், ஸ்ரீபெரும்புதுாரில் உற்பத்தி செய்யப்படும் கார்கள், ரயிலில் கொண்டு செல்வதும் நிறுத்தப்பட்டு விட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று, வரதராஜபுரம் அருகில் உடைந்த தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, உடைந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.