/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 25, 2025 02:31 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை, விரைந்து முடிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டார்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை நேற்று, கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
அப்போது, வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில், பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ், 1.22 கோடியில் கட்டப்பட்டு வரும் 24 வீடுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, தொடுகாடு ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு, 3.15 கோடியில் 72 வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு நிதி திட்டத்தில் 48 வீடுகள் என, மொத்தம் 110 வீடுகளின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின், ஒன்றிய அதிகாரிகளிடம், வீடு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.