/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
கடம்பத்துாரில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
கடம்பத்துாரில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
கடம்பத்துாரில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : டிச 27, 2025 06:31 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், விரைந்து முடிக்க வேண்டுமென, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில், நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
தொடுகாடு ஊராட்சியில், தலா 5.08 லட்சம் ரூபாய் மதிப்பில் பழங்குடியின மக்களுக்காக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் 72 வீடுகள், தனியார் நிறுவனம் பங்களிப்பில் 48 வீடுகள் என, மொத்தம் 120 வீடுகள், 6.09 கோடி ரூபாயில் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.
பின், பேரம்பாக்கத்தில் 1.50 கோடி ரூபாயில் நடந்து வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட பணிகள் மற்றும் சத்தரை பகுதியில் 14.47 கோடி ரூபாயில் நடந்து வரும் இரு மேம்பால பணிகள் என, மொத்தம் 15.97 கோடி ரூபாய் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.
பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், 'அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்' என, கலெக்டர் பிரதாப் உத்தர விட்டார்.