/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆகாயத்தாமரை அகற்றும் பணி அரைகுறை சாலையில் குவிந்த கழிவுகளால் கடும் அவதி
/
ஆகாயத்தாமரை அகற்றும் பணி அரைகுறை சாலையில் குவிந்த கழிவுகளால் கடும் அவதி
ஆகாயத்தாமரை அகற்றும் பணி அரைகுறை சாலையில் குவிந்த கழிவுகளால் கடும் அவதி
ஆகாயத்தாமரை அகற்றும் பணி அரைகுறை சாலையில் குவிந்த கழிவுகளால் கடும் அவதி
ADDED : டிச 27, 2025 06:27 AM

பொன்னேரி: நீர்வரத்து கால்வாயில் இருந்த ஆகாயத்தாமரைகள் அரைகுறையாக அகற்றப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருவதுடன், அந்த கழிவுகள் சாலையோரத்தில் குவிக்கப்பட்டு இருப்பதால், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் இருந்து தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு வழியாக செல்லும் நீர்வரத்து கால்வாய் முழுதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன.
சில நாட்களுக்கு முன், தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம், ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளை மேற் கொண்டது. இப்பணிகள் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்டன.
பெரும்பாலான இடங்களில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படாமல், அதே நிலையில் உள்ளன. இந்நிலையில், அரைகுறையாக அகற்றப்பட்ட ஆகாயத்தாமரை கழிவுகளும் முறையாக வெளியேற்றாமல், பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையோரம் குவியல் குவியலாக போடப்பட்டுள்ளன.
இருபது நாட்களாகியும் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஆகாயத்தாமரை கழிவு கள் சாலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை, மீண்டும் கால்வாயிலேயே தள்ளிவிடுவர்.
மேலும், நீர்வரத்து கால்வாய் முழுதும் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

