/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊரக வளர்ச்சி துறை பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
/
ஊரக வளர்ச்சி துறை பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ஊரக வளர்ச்சி துறை பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ஊரக வளர்ச்சி துறை பணிகள் விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : நவ 06, 2024 08:11 PM
திருவள்ளூர்:ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை, கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
சிறுவானுார் ஊராட்சியில், 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குழந்தை நேய பள்ளி, கைவண்டூர் ஊராட்சி தொழுதவாக்கம் கிராமத்தில். 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க பணி உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்தார்.
நெமிலியகரம் ஊராட்சியில், 13.69 கோடி ரூபாய் மதிப்பில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம், அரசு பள்ளி துாய்மை பணி, பட்டரைபெரும்புதுார் ஊராட்சியில் 18.42 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளையும் ஆய்வு செய்தார்.
இப்பணிகளை, கூடுதலான பணியாட்களை கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். உடன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராஜவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.