/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் கடைக்கு செல்லும் லாரிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
/
ரேஷன் கடைக்கு செல்லும் லாரிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
ரேஷன் கடைக்கு செல்லும் லாரிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
ரேஷன் கடைக்கு செல்லும் லாரிகளை கண்காணிக்க கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 08, 2024 10:07 PM
திருவள்ளூர்:ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள ஜி.பி.எஸ்., கருவிகளை தொடர்ந்து கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர பொது வினியோக திட்ட ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலையைில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள ஜி.பி.எஸ்., கருவிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் துவரம் பருப்பு, பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
பண்டிகை காலம் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான அளவு பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். குடும்ப அட்டை கோரி நிலுவை உள்ள விண்ணப்பங்களை விரைந்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கவுசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.