/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தடுக்க கலெக்டர் உத்தரவு
/
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தடுக்க கலெக்டர் உத்தரவு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தடுக்க கலெக்டர் உத்தரவு
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தடுக்க கலெக்டர் உத்தரவு
ADDED : டிச 21, 2024 10:31 PM
திருவள்ளூர்:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு துறையினருடன் கலந்தாலோசனை நேற்று நடந்தது.
கூட்டத்தில் திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு தரம் குறித்த விதி நடைமுறைபடுத்தவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்த புகையிலை பொருட்கள் பயன்பாட்டினை தடுக்க உணவு பாதுகாப்பு துறையினருடன் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், உணவு பொருட்களின் தரம் குறித்து கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையினர் கூட்டு புல தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இவ்வறிக்கையினை உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு கடைகளை மீண்டும் திறக்க விடாமல் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.