/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குருவராஜகண்டிகை தலைவர் பதவியை நீக்கி கலெக்டர் அதிரடி
/
குருவராஜகண்டிகை தலைவர் பதவியை நீக்கி கலெக்டர் அதிரடி
குருவராஜகண்டிகை தலைவர் பதவியை நீக்கி கலெக்டர் அதிரடி
குருவராஜகண்டிகை தலைவர் பதவியை நீக்கி கலெக்டர் அதிரடி
ADDED : நவ 30, 2024 01:13 AM

திருவள்ளூர்:ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, குருவராஜகண்டிகை ஊராட்சி தலைவர் பதவியை கலெக்டர் அதிரடியாக நீக்கி உள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், குருவராஜகண்டிகை ஊராட்சி தலைவர் ரவி. இவர், பல்வேறு நிகழ்வுகளில் ஊராட்சி தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையில் இருந்து தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது மற்றும் சட்ட விதிமுறையை மீறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபணமாகியுள்ளது.
இவர், தொடர்ந்து ஊராட்சி தலைவராக செயல்பட்டால், ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன், தன் அதிகாரத்தை மேலும் துஷ்பிரயோகம் செய்வார்.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் கலெக்டருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குருவராஜகண்டிகை ஊராட்சி தலைவர் ரவி, பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.