/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அன்னையர் தினத்தில் கலெக்டர் பாராட்டு
/
அன்னையர் தினத்தில் கலெக்டர் பாராட்டு
ADDED : மே 17, 2025 09:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச அன்னையர் தின விழா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்தது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார்.
பின், குழந்தைகளை சிறந்த முறையில் பராமரித்த அன்னையர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அன்னையர்களுடன் கேக் வெட்டி அன்னையர் தினத்தை கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து 'ஹோப்' சிறப்பு பள்ளி மாணவ - மாணவியர் பாட்டு பாடி, 'கீ போர்டு' வாசித்து தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், 'ஹோப்' அறக்கட்டளை நிறுவனர் நாகராணி உட்பட பலர் பங்கேற்றனர்.